ADDED : ஜூன் 02, 2010 11:02 PM
மடத்துக்குளம் : வேடபட்டியில் தனியாருக்கு சொந்தமான வெல்ல உற்பத்தி ஆலையில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மடத்துக்குளம் அருகே வேடபட்டியில் முருகசாமி( 55) என்பவருக்கு சொந்தமான வெல்ல ஆலை உள்ளது. ஆலையின் முன்பகுதியில் கரும்பு சாறு எடுக்கப்பட்ட சக்கைகள் குவிக்கப் பட்டிருந்தன. நேற்று மதியம் இந்த கரும்பு சக்கைகளில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. வேலை பார்த்தவர்கள் பதறியடித்து ஆலையை விட்டு வெளியேறினர். தகவலறிந்த உடுமலை தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.